சின்னத்தம்பி சீரியல் நடிகர் பிரஜனின் புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்னும் சீரியல் மூலம் அறிமுகமானார் ப்ரஜின். இதனையடுத்து, சின்னதம்பி என்ற சீரியலிலும் இவர் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி தமிழில் பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்துள்ளார். சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் அன்புடன் குஷி எனும் சீரியலில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் இவர் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
