Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்கள் இல்லாமல் நான் இல்லை – நடிகர் ரஜினி ட்விட்

நடிகர் ரஜினிகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி என பதிவிட்டுள்ளார். #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻 — Rajinikanth […]

Categories
சற்றுமுன் சினிமா தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதி …!!

கொரோனா பேரிடர் காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும், நோய்த் தொற்றுக்கு எதிராக ஒரே வரிசையில் நின்று வலுவாக போராடி வருகிறது. தன்னார்வலர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை நிவாரணமாக வழங்கி வருகின்றார்கள். இந்த நிலையில்தான் தற்போது நடிகை ஜோதிகா கொரோனா தடுப்பு பணிக்கான நிவாரணம் வழங்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஜோதிகா ஒரு நிகழ்ச்சியில் பேசிய தாக ஒரு வீடியோ உலா வந்தது. அதில் தஞ்சை பெரிய கோவிலுக்கு […]

Categories
சினிமா

“வரவேற்க யாரும் வரவில்லை” லண்டன் சென்ற தலைவாசல் விஜய்…. கொரோனா அச்சத்திற்கு இடையே பகிர்ந்த அனுபவம்….!!

கொரோனா தாக்கத்திற்கு இடையில் லண்டன் சென்ற புகழ்பெற்ற நடிகர் தலைவாசல் விஜய் அவரது அனுபவத்தை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தலைவாசல் விஜய். இவர் பெல்பாட்டம் என்ற ஹிந்தி திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்துவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், படக்குழுவினருடன் தலைவாசல் விஜய்யும் லண்டனுக்கு சென்றுள்ளார். கொரோனா தாக்கத்திற்கு இடையில் லண்டனில் இருக்கின்ற தலைவாசல் விஜய் கூறும்போது, “ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்பிற்காக லண்டன் வந்தது […]

Categories
சற்றுமுன் தமிழ் சினிமா

நடிகர் விஜய் ஒரு ரவுடி – நடிகை பரபரப்பு குற்றசாட்டு …!!

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.  இவர்களின் குடும்பத்தையும் விமர்சித்து நடிகர் சூர்யாவிற்கு நடிக்கத் தெரியாது என்று கூறிய மீரா மிதுன்,  விஜயையும் விட்டுவைக்கவில்லை. சினிமாவின் மாபியா என்றெல்லாம் விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் விஜய்  ரசிகர்களும் விமர்சித்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் கொண்ட மீராமிதுன் தற்போது புதிதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடித்தது லக்… பிரபல நடிகருடன் ஜோடியாகும் சீரியல் நடிகை…!!

சின்னத்திரையில் கலக்கிய பிரபல நடிகை தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். வாணி போஜன் தெய்வமகள் போன்ற பிரபல நாடகங்களில் நடித்து, சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படம் செம்ம ஹிட் கொடுத்தது.இப்படம் தற்போது உலகத்திரைப்பட விழா வரைக்கும் செல்ல இருக்கிறது, இதனை அடுத்து வாணி போஜன் வைபவுடன் லாக்கப் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் தியேட்டரில் வெளியிடப்படாமல் தற்போது டிஜிட்டலில் வர இருக்கிறது. இதை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் ரசிகர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று பயந்தேன்”- பிரபல நடிகர் ஓபன் டாக்…!!

பிரபல நடிகர் ஒருவர் விஜயின் புலி படத்திற்கு பிறகு அவரின் ரசிகர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று  பயந்ததாக கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் அதிகம் கொண்டாடும் நடிகர்களில் மிக முக்கியமானவர் விஜய். இவருக்கு என்று லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் ரிலிஸிற்காக தான் காத்துக் கொண்டு இருக்கிறார். விஜய்யின் ரசிகர்களும் அவருடைய படத்திற்காக காத்திருக்கின்றனர். விஜய் திரைப்பயணத்தில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் புலி. இந்தப் படம் மிகப்பெரிய தோல்வியை […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

28 வயசு இளம் நடிகையுடன்…. 60 வயசு நடிகருக்கு 3ம் திருமணம்…. வைரல் ஆகும் விசித்திர ஜோடி …!!

ஹாலிவுட் பிரபல நடிகர் தன்னைவிட 31 வயது குறைவான நடிகையை திருமணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது சில சினிமா பிரபலங்களின் வாழ்க்கை பல்வேறு திருமணம், விவாகரத்து, லிவ்விங் இன் ரிலேஷன்ஷிப் என அனைத்தும் நிறைந்ததாக இருக்கும். இதுபோன்ற செய்திகள் பத்திரிக்கைகளில் வருவதும் சாதாரணம். அதோடு ஹாலிவுட் சினிமாவில் இது மிகவும் சகஜமான ஒன்று. தற்போது ஹாலிவுட் சினிமாவின் ஸ்டாரான சீன் பெண் இளம் நடிகை லைலா ஜார்ஜை திருமணம் செய்துள்ளார். இவ்விருவருக்கும் இடையே 31 வயது வித்தியாசம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு ஆபத்து வந்தா அதுக்கு சூர்யா தான் காரணம் – மீரா மிதுன்

பிக்பாஸ் பிரபலம் நடிகை மீரா மிதுன் தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு காரணம் சூர்யாதான் என்று புரளி ஒன்றை கிளப்பியுள்ளார். தமிழ் திரை உலகில் சில படங்களில் மட்டும் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகண்டு பிரபலமாகியுள்ளார். இப்பொழுது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் சர்ச்சை மிகுந்த கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் கூட “திரிஷா தன்னை காப்பியடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” எனக்கூறி பரபரப்பாக்கினார். அதுமட்டுமில்லாமல் நடிகர்கள், ரஜினி, […]

Categories
இந்திய சினிமா சினிமா

3 கோடி சம்பளம் வேணும்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னணி நடிகை…!

பிரபல முன்னணி நடிகை மூன்று கோடி ரூபாய் சம்பளம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை அனுஷ்கா. தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்தார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக பிரபலமான பிறகு ஐதராபாத்தில் சொந்த வீடு வாங்கி வசித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். எனவே பெரிய தொகையை சம்பளமாக பெற்று வருகிறார். அவரை புதிய தமிழ் படம் ஒன்றில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்திரமுகி 2 கதாநாயகி யார்…? விளக்கம் கொடுத்த லாரன்ஸ்…!!

‘சந்திரமுகி 2’ திரைப்படம் பற்றி பரவிக் கொண்டிருக்கும் வதந்திகளுக்கு லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதனை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்த நிலையில், 15 வருடங்களுக்குப் பின்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் வர இருக்கிறது என்ற அறிவிப்பு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் இப்படத்தில் […]

Categories
சினிமா

நடிகர் சோனு சூட்டின் சமூக சேவை… “எங்கள் பங்களிப்பும் இருக்கட்டும்” உண்டியலை உடைத்த அக்கா-தம்பி…!!

அக்கா-தம்பி இருவரும் இணைந்து சோனு சூட் செய்துவரும் சமூக சேவைக்கு பங்களிக்க முடிவு செய்து தங்களது உண்டியலை உடைத்த சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் டிராக்டெர் இல்லாத விவசாயி ஒருவர் தனது இரு மகள்களைக் கொண்டு உழவு செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியதை பார்த்த பாலிவுட் நடிகர் சோனு சூட் அவருக்கு ஒரு டிராக்டரை பரிசாக அளித்துள்ளார். இதனையடுத்து சோனு சூட்டின் சமூக சேவைக் குறித்து பரவலாக பேசப்பட்டது. இதனை அறிந்த டெல்லி திகாரைச் சேர்ந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வனிதாவிடம் ரூ.1.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு லட்சுமி ராமகிருஷ்ணன்…!!

தன்னை அவதூறாக பேசியதாக குற்றம் சுமத்தி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் 1.25 கோடி ரூபாய் நஷ்டஈடாக கேட்டுள்ளார். சமூக வலைத்தள நேரலை  விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக கூறி நடிகை வனிதாவிடம் ரூ.1.25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தது சர்ச்சை ஆனதை தொடர்ந்து அது குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாட்டிற்கு நல்லதல்ல….. எல்லாரும் படிங்க….. வீடியோ போடுங்க….. நடிகை ஆத்மிகா ஆதங்கம்….!!

நடிகர்களான சூர்யா, கார்த்தி ஆகியோரை தொடர்ந்து நடிகை ஆத்மிகா EIA 2020 குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். நாட்டின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக EIA 2020 ஆர்டிகள் அமைந்திருப்பதாக பலரும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபலங்களும் இந்த EIA 2020க்கான வரைவு அறிக்கையை படித்துவிட்டு இது நல்ல முடிவு அல்ல என்ற கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர்களான சூர்யா கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் EIA […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிறந்த நாளை முன்னிட்டு 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு… நடிகர் சோனு சூட்…!!

பிரபல நடிகர்  தனது பிறந்தநாளை முன்னிட்டு குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக 3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி  கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் வில்லனாகவும், துணை வேடங்களிலும் நடித்து அசத்தியவர் சோனு சூட். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அதற்குச் சரியான எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமென்றால், கொரோனா ஊரடங்கு காலத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல, களத்தில் இறங்கி உதவி செய்து வருகிறார். அது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திறமை தான் காரணம்…. அதிக சம்பளம் கேட்பதில்லை…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரகாஷ்ராஜ்….!!

சினிமா நடிகர்கள் சம்பளத்தை நிர்ணயம் செய்வதில்லை என பிரகாஷ்ராஜ் சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். சினிமாவில் விஜய்,அஜித், தனுஷ், ரஜினி, கமல், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். இவர்கள் அவர்களுக்கான சம்பளத்தை மார்க்கெட் நிலைமையைப் பொறுத்து அதிகமாக கேட்பதாகவும் கேட்ட தொகையை கொடுத்த பிறகே படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வந்தன. தற்போது சினிமா ஹீரோக்களின் சம்பளம் குறித்து ஒரு சுவாரசியமான தகவலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்கள் அன்பில் திக்குமுக்காடிப் போனேன்” ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்…!!

ரசிகர்களாகிய உங்களால் நான் பெருமையும், கர்வமும் கொள்கிறேன் என்று நடிகர் தனுஷ் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்: “உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்குமுக்காடி போய் விட்டேன். அனைத்து பொதுவான முகப்பு படங்கள் (common DP), கலவை வீடியோக்கள் (Mash up video), […]

Categories
இந்திய சினிமா சினிமா

கேஜிஎஃப் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு… ராக்கியை மிரட்டவரும் ‘அதீரா’..!!

கேஜிஎஃப் 2 படத்தில் நடித்திருக்கும் சஞ்சய் தத்தின் ‘அதீரா’ கதாப்பாத்திரத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டதை அடுத்து அந்தப் போஸ்டர் தற்போது வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கன்னடத் திரையுலகில் 2018ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ‘கேஜிஎஃப்’. இப்படத்தில் நடிகர் யஷ் நாயகனாக நடித்திருந்தார். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியான சில நாள்களிலேயே இந்தப் படம் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது. சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

தனுஷ் ரசிகர்களே…. பாலிவுட் ஷூட்டிங் இப்ப நம்ம ஊருல….. எங்கனு தெரியுமா…? வெளியான அறிவிப்பு….!!

தனுஷ் அடுத்தகட்டமாக பாலிவுட்டில் நடிக்கும் திரைப்படத்திற்கான சூட்டிங் வருகின்ற அக்டோபர் மாதம் மதுரையில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் திறமையான நடிகர் தனுஷ். இவரது திறமைக்கு உதாரணமாக ஏராளமான தமிழ் படங்களை கூறலாம். அதே போல் இவரது திறமைக்கு தக்க பரிசாக பிற மொழி படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் அடிக்கடி குவிந்த வண்ணம் இருக்கிறது. தமிழ் சினிமா திரையுலகிலிருந்து ஹிந்தி சினிமாவிற்கு செல்லும் நடிகர்கள் ஒரு சிலரில் தனுஷும் ஒருவர். ஆனால் ஹாலிவுட் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

காக்க…. காக்க…. சுற்றுச்சூழல் காக்க….. நம் மௌனம் கலைப்போம்…. மாஸ் ட்விட் போட்ட சூர்யா …!!

சுற்றுசூழல் விஷயத்தில் நாம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா தற்போது கூறியிருக்கிறார். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு விவகாரத்தில் நடிகர் சூர்யா டுவிட்டரில் இந்த பதிவினை போட்டுள்ளார். சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை குறித்து ஏற்கனவே அவருடைய சகோதரர் கார்த்திக்   திருக்குறளை மேற்கோள் காட்டி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையை நடிகர் சூர்யா சிவகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். பேசிய வார்த்தைகளைவிட பேசாத மௌனம் மிக ஆபத்தானது காக்க காக்க சுற்றுச்சூழல் காப்போம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது விடுமுறையல்ல….. சொன்னவாரே இப்படி செய்யலாமா…? பிரபல நடிகர்கள் மீது வழக்கு….!!

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடிகர்களான சூரி விமல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நோயின் பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஊரடங்கானது தொடர்ந்து 6 வது கட்டநிலையில் அமுலில் இருந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்துவரும் சூழ்நிலையில் வேலைக்காக வெளியூர் சென்று மாட்டிக் கொண்டவர்கள் இன்னும் சொந்த ஊர் திரும்பவில்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு “ரகிட… ரகிட… ரகிட” கலக்கல் பாட்டுக்கு…. ஆட்டம் போடும் ரசிகர்கள்….!!

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படத்திலிருந்து ரகிட ரகிட ரகிட பாடல் வெளியாகியுள்ளது. இந்தியன் ப்ரூஸ்லீ, இளைய சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பட்டங்களுக்கு சொந்தக்காரரான இளம் அசத்தல் நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாள் இன்று. இவரது பிறந்த நாளை ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே தனுஷின் பிறந்தநாள் என்று ஆரவாரத்தோடு இருக்கும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் விதமாக அவர் நடிக்கும் ஜகமே தந்திரம் என்கிற படத்திலிருந்து சூப்பர் ஹிட் பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சிவகுமார் குடும்பத்திற்கு சிக்கல்….!! கவலையில், சூர்யா, கார்த்தி ரசிகர்கள் …!!

நாடு முழுவதும் இருக்கும் கொரோனா தொற்று ஒட்டுமொத்த மனித சமூக வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை புகுத்தியுள்ளது. சினிமா துறையிலும் ஏராளமான மாற்றங்கள் கொரோனவால் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து திரையரங்குகளிலும் மூடப்பட்டுள்ளதால், ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT  தளத்தில் வெளியாகியது. இதற்கு பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதுமட்டுமல்லாமல் சூர்யா சிவகுமார் அவருடைய குடும்பத்தினர் படத்தை திரையில் திரையிடமாட்டோம் என்றெல்லாம் சொல்லிவந்தனர். இது நீண்ட நாட்களுக்கு முன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

இந்த 2 வேடத்திலும் நடிக்க எனக்கு ஆசை – நடிகை பிரியாமணி

தான் நடிக்க விரும்பும் இரண்டு கதாபாத்திரம் குறித்து நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.  2004 ம் ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. “பருத்திவீரன்” படத்தில் நடித்து பிரபலமானதுடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகை பிரியாமணி கொரோனா ஊரடங்கில் அளித்த பேட்டியில் கூறியதாவது: “நான் ‘விராட பருவம்’ என்ற படத்தில் நக்சலைட்டாக நடித்து வருகிறேன். […]

Categories
இந்திய சினிமா சினிமா

காசு இல்ல… மாடு வாங்க முடியல… மகள்களை வைத்து உழுத விவசாயி… உடனே உதவிய பிரபல நடிகர்..!!

மாடு இல்லாததால் மகள்களை வைத்து உழவு செய்த விவசாயிக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கி அனுப்பியுள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த நாகேஸ்வரராவ் என்பவர் தக்காளி விவசாயம் செய்து வந்தார். ஊரடங்கு காரணத்தினால்  வாழ்வாதாரம் அதிக அளவு பாதிக்கப்பட்ட இவர் தற்போது பருவமழை காலம் என்பதால் அதனை விவசாயத்திற்கு பயன்படுத்த முடிவெடுத்தார். ஆனால் கையில் பணம் இல்லாத காரணத்தால் வயலில் ஏர் பூட்ட வாடகைக்கு மாடு வாங்க முடியவில்லை. ஆனாலும் விவசாயி பின்வாங்காமல் தனது […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த மாதம் முதல் திரையரங்குகள் திறக்கப்படும்..??

நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் சினிமா திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து  நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி சினிமா திரையரங்குகள் மூடப்பட்டன ஊரடங்கு தளர்வுவிற்கு பிறகு பல்வேறு தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் திரையரங்குகள் திறக்க மத்திய மாநில அரசுகள் அனுமதிக்கவில்லை. இதனால் சினிமா தொழில் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. தியேட்டர்களை திறக்க மத்திய அரசு நடவடிக்கை […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

இழந்த நேரத்தை மீட்க முடியாது : ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட் …!!

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள்  எழுந்து கொண்டு இருக்கும் நிலையில், அவர் இறுதியாக நடித்த தில் பட்சாரா  திரைப்படம் சமீபத்தில் தான் OTT தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டது. இதற்க்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். அந்த படதிற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது, பாலிவுட்டில் தன்னுடைய வாய்ப்புகளை பறிப்பதற்கும், தடுப்பதற்கு நிறைய பேர் வேலை செய்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது இந்திய சினிமாவில் பெரிய ஒரு விமர்சனத்துக்கு உள்ளாகியது. ஒரே மேடையில் இரண்டு ஆஸ்கர் விருது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாடகர்கள் இனி இதையும் முயற்சிக்க வேண்டும்”- ஹிமேஷ் ரேஷ்மியா கருத்து…!

பாடகர்கள் தங்களின் சொந்த பாடல்களுக்கு தாங்களே இசை அமைக்க முயற்சிக்க வேண்டும் என்று ஹிமேஷ் ரேஷ்மியா கருத்து தெரிவித்துள்ளார். பாடகர்கள் அவர்களின் சொந்த பாடல்களுக்கு தாங்களே இசையமைக்க  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தங்களின் சொந்த ஆன்மாவை உணர்ந்து கொள்வார்கள் என்று நடிகரும், இசையமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மியா கூறியுள்ளார். எனது பாடல்கள் வழக்கமான மண்டலத்தில் இருப்பதில்லை, எப்போதுமே வித்தியாசமாகத்தான் இருக்கும். அதனால் வேறு யாரும் என்பாடல்களை  நிகழ்த்துவது சாத்தியமற்றது. இசையமைப்பாளர்களுடன் பாடகர்கள் 10 மணி நேரம் வரை […]

Categories
இந்திய சினிமா சினிமா

மல்லுக்கட்டும் பாலிவுட் நடிகைகள்…! ட்விட் போட்டு களமிறங்கிய ரசிகர்கள் …!!

கங்கனாவின் ரசிகர்கள் நக்மாவிற்கு எதிராக கிண்டல் செய்து  வருவது ட்ரெண்ட் ஆகி வருகின்றது. பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகர் சுஷாந்த் தற்கொலைக்குப் பின்னர் வாரிசு அரசியல் என்ற பிரச்சனை உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா மற்றும் பல நடிகைகள் சுஷாந்த் சிங்கிற்கு ஆதரவாகப் பேசி குரல் கொடுத்தனர். கங்கனாவை கிண்டலடிக்கும் வகையில் நடிகை நக்மா ட்வீட் செய்திருந்ததை தெரிந்துகொண்ட கங்கனா ரசிகர்கள் நக்மாவை விமர்சித்து வருகின்றனர். பஞ்சோலி கங்கனா ரனாவத்தின் காதலர் இல்லை. தொடக்கத்தில் ஆலோசகராக இருந்த […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

குழந்தைகளின் ஆன்லைன் கல்வி… பசு மாட்டை விற்று மொபைல் வாங்கிய தந்தை…. விரைந்து உதவிய நடிகர் சோனு சூட்…!!

ஆன்லைன் படிப்பிற்காக தனது பசு மாட்டை விற்று ஸ்மார்ட்ஃபோன் வாங்கிய குடும்பத்தினருக்கு பிரபல நடிகர் சோனுசூட் உதவி செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால்ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க ஸ்மார்ட் போன், லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் ஏதேனும் ஒன்று தேவையாக இருக்கிறது. இதை வாங்குவதற்கு ஏழ்மையில் உள்ளவர்கள் தவிக்கிறார்கள். இமாச்சல பிரதேசத்தில் உள்ள கும்மர் என்ற கிராமத்தில் வசித்து வரும் குல்தீப் குமார் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோனியா அகர்வாலுக்கு திருமணமா ? ட்விட் பதிவால் எழும் கேள்விகள் ..!!

கடந்த 2003 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படத்தில் சோனியா அகர்வால் தமிழ் நடிகையாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் வெற்றி பெற்றதை அதனைத்தொடர்ந்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் விஜய்யின் மதுர, சிம்புவின் கோவில், வானம், 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை, திருட்டுபயலே, சதுரங்கம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆகிய படங்களிலும் நடத்தியிருக்கிறார். செல்வராகவனை 2006 இல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிறந்தநாள் ட்ரீட்…! ”பிச்சைக்காரன் – 2” கலக்க போகும் விஜய் ஆண்டனி ..!!

இசையமைப்பாளர், நடிகர் என பன்முகங்களில் கலக்கும் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பிச்சைக்காரன் படத்தின் 2ஆவது பாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை பாரம் படப்புகழ் பிரியா கிருஷ்ணசாமி இயக்க உள்ளார். சண்டைப்பயிற்சி இயக்குனராக மகேஷ் மேத்யுவும், ஒளிப்பதிவு தேனீ ஈஸ்வரும் தேர்வாகியுள்ளனர். இதுபற்றி திரைப்பட தயாரிப்பாளரும் விஜய் ஆண்டனியின் மனைவியுமான திருமதி பாத்திமா  கூறியுள்ளது என்னவென்றால், எங்களின் அடுத்த கனவுப்படத்தை, பிச்சைக்காரன் 2 என்ற தலைப்பில் அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். பிச்சைக்காரன் படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா

முதல் நாள் நடுங்கி போனேன்…. சல்மான் ‘டீ-சர்ட்’ கொடுத்தார்… மனம் திறந்த மேகா ஆகாஷ் …!!

சல்மான்கானுடன்  ஜோடியாக நடித்த மேகா ஆகாஷ் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து  பகிர்ந்துள்ளார். மேகா ஆகாஷ் தமிழில் நடித்த முதல் திரைப்படம் “ஒரு பக்க கதை” இது இன்னும் ரிலீசாகவில்லை என்றாலும் பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தால் அவரின் புகழ் வெளிச்சத்துக்கு வந்தது. இதை தொடர்ந்து சிம்பு-தனுஷ் ஆகியோருடன் திரைப்படங்களில் ஜோடியாக நடித்த மேகா ஆகாஷீக்கு இப்பொழுது பாலிவுட்டில் சல்மான்கானுக்கு ஜோடியாக “ராதே” என்னும்  திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்க்’ அணிந்து நண்பர்களுடன் உலா வந்த தளபதி விஜய்… வைரலாகும் போட்டோ..!!

நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் முக கவசம் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர். தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்து படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றார். இப்படம் குறித்து படக்குழுவினர் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் விஜய் சேதுபதி படத்தின் டிரைலர் குறித்து கூறியிருந்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு அழகா… நடிகைகளை மிஞ்சும் பேரழகு… வெளியான நடிகரின் மகள்கள் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் நடித்த ஒரு பிரபலமான நடிகரின் மகள்கள் புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. தமிழ் திரையுலக வரலாற்றில் கதாநாயகன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், ஒளிப்பதிவாளர் என பல முகங்களைக் கொண்டவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் 1982ம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற ஒரு படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக நடித்து இருந்தார். அதோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார். இதைத்தொடர்ந்து 1988 ஆம் ஆண்டில் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் […]

Categories
இந்திய சினிமா சினிமா

குணமடைந்ததாக வந்த செய்தி தவறானது – அமிதாப் பச்சன் ட்விட்..!!

சற்றுமுன் கொரோனாவிலிருந்து குணமடைந்தாக தகவல் வெளியான நிலையில், அந்த தகவல் போலியானது என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி இந்திய சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்தது.. கொரோனா உறுதி செய்யப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள நானாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்..   இந்நிலையில் கொரோனாவிலிருந்து அமிதாப் பச்சன் மீண்டுள்ளார் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவிலிருந்து மீண்டார் அமிதாப் பச்சன்..!!

கொரோனாவிலிருந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீண்டுள்ளார். சமீபத்தில் சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி இந்திய சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்தது.. கொரோனா உறுதி செய்யப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார் அமிதாப் பச்சன்.. 2 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது.. தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

கங்கனாவின் விமர்சனம்…. மரியாதையை சம்பாதிக்கவேண்டும் உத்தரவிட முடியாது…. பதிலடி கொடுத்த டாப்ஸி…!!

மரியாதையை சம்பாதிக்க வேண்டுமே தவிர உத்தரவிடக் கூடாது என்று நடிகை டாப்ஸி கங்கனாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.   இளம் நடிகர்கள் வாரிசு அரசியல் குறித்தும், வாரிசு அல்லாத நடிகர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் நடிகை கங்கனா ரணாவத் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் வாரிசு அரசியலை ஊக்குவித்து அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களையும் தாக்கி பேசியுள்ளார். மேலும் டாப்சி, ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்ட நடிகைகளையும் விமர்சித்திருந்தார். சமூக வலைதள பக்கத்தில்” டாப்சி வாழ்நாளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை” அஜித்துடன் இணைந்த பிரபல நடிகர்…. வெளியான தகவல்…!!

போனி கபூர் தயாரிப்பில் உருவான வலிமை படத்தில் தல அஜித்துடன் மலையாள பிரபலம் ஒருவர் இணைய உள்ளதாக தெரிய வந்துள்ளது  தல அஜித் நடிப்பில் உருவாகி வந்த படம் வலிமை. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் இந்தப்படத்தை உருவாக்கி வருகிறார். நேர்கொண்ட பார்வை, சதுரங்க வேட்டை,  தீரன், போன்ற படங்கள் இயக்கிய வினோத் இயக்கத்தில் தான் இப்படம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் படபிடிப்பு நின்றுள்ளதால் கொரோனா முடிந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசையில் ஜொலிக்கும் யுவன்… சிறு வயதில் எப்படி இருந்தார் தெரியுமா..? வெளியான அரியவகை புகைப்படம்…!!

இசையமைப்பாளார் யுவன் சங்கர்ராஜா மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன் இருவருடைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா, இவர் முன்னணி திரைப்பட நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை வைத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அதன் தொடர்ச்சியாக  பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பணியாற்றி ரசிகர்களுக்குகிடையே பிரபலமாகியுள்ளார். தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மூலம் அதிக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லம்போகினி காரில் கிளம்பிய ரஜினி…. வெளியான புகைப்படம்…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய லம்போகினி காரை ஓட்டிச்சென்ற  புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இச்சமயத்தில் நடிகர்களும் நடிகைகளும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வீட்டில் இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்சமயம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாஸ்க் அணிந்தபடி […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘Suicide or Murder’… அச்சு அசலாக மீண்டும் வருகிறார் சுஷாந்த்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சாயிலாக இருக்கும் நபரை  வைத்து புதிய திரைப்படம் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  கடந்த ஜூன் 14-ம் தேதி இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் உள்ள  தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சுஷாந்தின் தற்கொலைக்கு வெவ்வேறு  காரணங்கள் கூறி வந்தாலும், மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் இதைச் செய்திருக்கலாம் என்றே கருதப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சுஷாந்தின் வாழ்க்கை வரலாறை சிலர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா பரவல் அச்சம்… பங்களாவை கவரால் மூடிய ஷாருக்…!!

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பிரபல நடிகர் ஷாருக்கான் தனது பங்களாவை பிளாஸ்டிக் கவர் வைத்து மூடியுள்ளார் கொரோனா வைரஸ் பாதிப்பு பாலிவுட் திரையுலகையும் விட்டுவைப்பதாக இல்லை. நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆரத்யா இவர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால், திரையுலகம் முழுவதும் கொரோனா பயத்தில் மூழ்கி இருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்க்காக, நடிகர் ஷாருக்கான் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய்…. இந்திய அளவில் முதலிடம்….!!

இந்திய அளவில் யாருடைய படம் அதிக அளவு பார்க்கப்படுகின்றது என்ற பட்டியலில் விஜய் முதலிடத்தில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். இதனால் டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து இருக்கிறது என்று கூறலாம். மேலும் இதை கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகளில் முன்னணி நடிகர்களின் படங்களையே பார்த்து தொடர்ந்து ஒளிபரப்பி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்த ஊரடங்கு காலத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனராக மாறும் நடிகைகள்.. புதிய முயற்சியை கையில் எடுக்கும் 3 பேர்..!!

சினிமா நடிகைகள் மூன்று பேர் படம் இயக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நித்யா மேனன், ரம்யா நம்பீசன், பூ பார்வதி மூவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது அதாவது மூன்று பேரும் விரைவில் படம் இயக்க ஆயத்தமாகியுள்ளனர். இதற்கு முன் ரம்யா நம்பீசன் குறும்படம் ஒன்றின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். ஆனால் நித்யா மேனன் மட்டும் சற்று தயங்கிக் கொண்டே இருக்கிறார். இதனிடையே பூ பார்வதி இரண்டு கதைகள் தன்னிடம் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். அதற்கான ஹீரோக்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரிய காணொளி… ஒரே விமானத்தில் யாரெல்லாம் போனாங்க தெரியுமா…?

தமிழ் திரை உலகின்  அனைத்து நட்சத்திரங்களும் இருக்கும்  வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரஜினி ,கமல் ,விஜய் மற்றும் விஜயகாந்த் தற்போது அரசியல்வாதியாக இருந்தாலும் என்றும் மக்கள் மனதில்  இடம் பிடித்த சிறந்த கதாநாயகனாக தான் திகழ்கிறார் .இப்படி அனைத்து நடிகை நடிகர்களும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டால் அந்த நிகழ்வு சமூக வலை தளங்களில் ஒரு வைரலாக தான்  வலம் வரும் . அப்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேரளா தங்கக் கடத்தல் விவகாரம்…. நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பல்….!!

தங்க கடத்தலுக்கு நடிகை பூர்ணாவை பயன்படுத்த கும்பல் ஒன்று மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் நடந்த தங்க கடத்தல் சம்பவம் அந்த மாநில அரசையே ஆட்டம் காண செய்துள்ளது. சொப்னா என்ற பெண்ணை மையமாக வைத்து செயல்பட்டு வந்த இந்த கடத்தல் கும்பலுடன் கேரள மாநில அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளும் ஈடுபட்டு வந்தது இப்போதுதெரிய வந்துள்ளது. கடந்த ஒரு  வருடத்தில் மட்டும் 200 கிலோ தங்கத்தை இந்த கும்பல் கடத்தி இருக்கிறது. கடத்தல் கும்பலின் பெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதிர்பார்ப்புடன் சென்று அவமானப்பட்டேன்… கசப்பான நிகழ்வை பகிர்ந்த மாதவன் ..!!

எதிர்பார்ப்புடன் சென்று தான் அவமானப்பட்ட நிகழ்வு குறித்து நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். தனக்கு எட்டு வயது இருக்கும் போது ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக ஒரு கிரிக்கெட் வீரரிடம் தான் அவமானப்பட்ட நிகழ்வை நினைவுகூர்ந்து பேசியிருக்கிறார் நடிகர் மாதவன். “அந்த கிரிக்கெட் வீரர் வந்துள்ளார் என்றதும் மிகவும் உற்சாகத்துடன் அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக முந்திக்கொண்டு நண்பருடன் சென்றேன். அவர் யாருடனோ பேசிக் கொண்டே ஒரு  50 பேருக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார் ஆனால் கையெழுத்து போடும்போது யாருடைய முகத்தையும் நிமிர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் தான் சரியான போட்டி … 5 கதாநாயகிகளுடன் அறிமுகமாகும் மருமகன்..!!

அறிமுகமாகும் முதல் படத்திலேயே விக்ரம் மருமகனுக்கு ஜோடியாக 5 நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். விக்ரம் தங்கை அனிதாவினுடைய மகன் அர்ஜுமன் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். அறிமுகமாகும் முதல் படத்திலேயே அவருடன் ஜோடியாக நடிக்க 5 நடிகைகள் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த படத்திற்கு “பொல்லாத உலகில் பயங்கர கேம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விஜய்ஸ்ரீ ஜி டைரக்ட் செய்கிறார். அர்ஜுமன் அறிமுகமாகி நடிக்கும் முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக வரும் கதாநாயகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அறிவியலை குறை சொல்லவில்லை… ஆனால் இது தான் திருப்தி – நடிகர் சூரி..!!

வீட்டில் படம் பார்ப்பதை விட தியேட்டரில் படம் பார்த்தால்தான் திருப்தி அளிப்பதாக நடிகர் சூரி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டு விட்டதால் நிறைய நடிகர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். நடிகைகளில் பெரும்பாலானோர்கள் ருசியாக சமைப்பது எப்படி என்று புத்தகம் பார்த்து படித்து சமைக்க கற்றுக் கொண்டுள்ளார்கள். நகைச்சுவை நடிகரான சூரி தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகிலுள்ள கிராமத்துக்கு போய் விட்டார். ஊரடங்கு காரணமாக தியேட்டரில் வெளியாக வேண்டிய படங்கள் ஓடிடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது எல்லாருக்கும் அமைந்துவிடாது “நான் ரொம்ப லக்கி”- நடிகர் ஆர்யா ..!!`

காதலித்து திருமணம் செய்து கொண்டதால் எங்கள் இருவருக்கும் இடையே முடிவெடுப்பதில் ஒற்றுமை நிலவுகிறது என்று மனம் திறந்துள்ளார் நடிகர் ஆர்யா. கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களுக்கு  பின் “டெடி” என்ற படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து நடிக்கும் சாயிஷா, லாக்டவுனில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டுள்ளார். குறிப்பாக, வெரைட்டி கேக் செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டுள்ளார். இதுகுறித்து ஆர்யா கூறும்பொழுது, “நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டதாலும், இருவரும் ஒரே துறையில் இருப்பதாலும், நிறைய விஷயங்களை ஒரே கோணத்தில் அலசி ஆராய்ந்து […]

Categories

Tech |