நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியை வடஇந்தியாவில் பலபேர் பார்க்கின்றனர். இதற்கிடையில் இந்நிகழ்ச்சி சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதாவது, 10 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய டிரைக்டர் சஜித்கானை பிக்பாசில் போட்டியாளராக சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி நடிகை மந்தனா கரிமி சினிமாவைவிட்டே விலகுவதாக அறிவித்தார். அத்துடன் சஜித்கானை பிக்பாசிலிருந்து நீக்கும்படி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் மத்திய மந்திரி அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதினார். […]
