நடிகர் சூர்யா அவரது உடற்பயிற்சியாளர் மூலம் ஆன்லைனில் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் . நடிகர் சூர்யா கொரோனா ஊரடங்கிலும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் . அவரை அவரது உடற்பயிற்சியாளர் நிர்மல் […]
