Categories
சினிமா தமிழ் சினிமா

ஆறு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்ட ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… அதிருப்தியில் ரஜினி ரசிகர்கள்…!!!

நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்தா’ படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வந்த திரைப்படம் ‘அண்ணாத்த’ . கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது . ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பில் நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு… ஒருவர் வெளியேறனும்… அதிரடியாக கமல் பேசும் ஃபர்ஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மிக தீவிரமாக விளையாண்டு வருகின்றனர். இந்த சீசனில் டைட்டில் வின்னர் யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. #BiggBossTamil இல் இன்று.. #Day97 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாவக் கதைகள்’ காளிதாஸ் ஜெயராம் தளபதியுடன் எடுத்த புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் தளபதியை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன் , வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து இயக்கிய ஆந்தாலஜி படம் ‘பாவக் கதைகள்’ . காதல் ,கௌரவம் ,அந்தஸ்து ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘தங்கம்’ […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மம்முட்டி வீட்டுக்கு மோகன்லால் திடீர் விசிட் … இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் மம்முட்டியை நேரில் சந்தித்து நடிகர் மோகன்லால் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான அஜித்-விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்வது போல் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களான மம்முட்டி- மோகன்லால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது வழக்கம் . மம்முட்டியின்  படங்கள் ரிலீசாகும்போது மோகன்லால் ரசிகர்களும் மோகன்லாலின் படங்கள் ரிலீசாகும் போது மம்முட்டி ரசிகர்களும் மோசமான விமர்சனங்கள் பதிவு செய்வது வழக்கம் . மலையாள நடிகர் சங்கத்துக்கு நிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு அடித்த அதிஷ்டம்… மேலும் ஒரு பட வாய்ப்பு…!!!

பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு மேலும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா . பின் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். மாடலிங் மற்றும் தொலைக்காட்சியில் தொடர்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸில் கலந்து கொண்ட பின் அதிகளவு பிரபலமடைந்தார் . இதையடுத்து இவரை தேடி சினிமா வாய்ப்புகள் வந்துள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சியான் விக்ரமின் ‘கோப்ரா’… படத்தின் அசத்தலான டீஸர் ரிலீஸ்…!!!

நடிகர் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள ‘கோப்ரா ‘படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’ படம் தயாராகியுள்ளது . தமிழ், ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்துள்ளனர்  . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விரைவில் டைட்டில் அறிவிக்கப்படும்’…D43 படம் குறித்து தனுஷ் போட்ட ட்வீட்…!!!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘D43’ படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என ட்விட்டரில் நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் நடிப்பில் கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் . இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ம்ருதி வெங்கட், பிரபல நடிகர் சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாகவும் படக்குழு அறிவித்திருந்தது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’… கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் படப்பிடிப்பு…!!!

இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது. சினிமா படப்பிடிப்புகளுக்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  தடை விதிக்கப்பட்டிருந்தது . தற்போது கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டுள்ளது ‌. ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செட்டில் இந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பரபரப்பு! என்னை கொன்றது 4 பேர்…. கூறிய சித்ராவின் ஆவி…!!

சித்ராவின் ஆவி தன்னை கொன்றது ஆனந்த் உள்ளிட்ட மூவரின் பெயரை கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சின்னத்திரை நடிகர் சித்ரா தனது கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக ஹேமந்தை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து விசாரணை தொடங்க ஆரம்பித்தும், சித்ராவின் இறப்பில் இன்னும் மர்மங்கள் நீடித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தமிழக அரசின் திடீர் உத்தரவு…! வெளியாகுமா மாஸ்டர் ? பரபரப்பு தகவல் …!!

திரையரங்கில் 100% இருக்கை உத்தரவை ரத்து செய்த தமிழக அரசு 50% இருக்கையுடன் திரையரங்கு செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. திரையரங்குகளில் 100% இருக்கைகள் அனுமதி ரத்து செய்யப்பட்டாலும் கூட தயாரிப்பாளர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகிறது. இந்த திரைப்படங்களுக்கான திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணி ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணியில் […]

Categories
சற்றுமுன் தமிழ் சினிமா மாநில செய்திகள்

இப்படி பண்ணிட்டாங்களே..! புலம்பவிட்ட அரசு… ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய்யின் படம் வெளியீடு என்றாலே திரையரங்கம் திருவிழா போல இருக்கும். அந்த வகையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் கொண்டாடும் வகையில் 100% இருக்கைகளுடன் திரையரங்கம் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்த நிலையில், தற்போது தமிழக அரசு 100% இருக்கை அனுமதியை 50 சதவீத அனுமதியுடன் படத்தையும் திரையிட உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு, மருத்துவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹோட்டலில் உணவு சமைக்கும் 80-ஸ் நடிகை… இவருக்கு இப்படி ஒரு நிலைமையா..?

80 களில் பிரபல திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர் ஜெயஸ்ரீ. தென்றலே என்னை தொடு என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர். நாளை மனிதன், பிஸ்தா போன்ற படங்களில் நடித்துள்ளார். 1988 திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டு முழுநேர இல்லத்தரசி ஆக வாழ்ந்துவந்தார். அமெரிக்காவில் செட்டில் ஆன இவர் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஹோட்டலில் சமைப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களும், திரையுலகினரும் குடும்ப வறுமையின் காரணமாக இப்படி வேலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸாக பேசிய பாலா… சல்யூட் அடித்த ஆரி… வேற லெவலில் வந்த செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்  டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதில் தற்போது நடக்கும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வரும் வாக்கியங்கள் யாருக்கு பொருந்தும் என்பதை கூற வேண்டும் . இந்நிலையில் இன்று வெளியாகிய முதல் புரோமோ வில் ஆரி தனக்கு வந்த வாக்கியத்திற்கான விளக்கத்தை அளித்துக் கொண்டிருக்கிறார் .அப்போது குறுக்கிட்ட ரம்யாவின் வாயை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: மாஸ்டர் படத்தை வெளியிட தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு நடிகர் விஜய் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தொடர்ந்து சாதிக்கும் அல்லு அர்ஜுனின் ‘புட்ட பொம்மா’ பாடல் … டுவிட்டரில் வெளியான மேக்கிங் வீடியோ…!!!

அல்லு அர்ஜுனின் ‘புட்ட பொம்மா’ பாடல் யூட்யூபில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் அலவைகுண்டபுரமலோ. 100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் அடித்தது ‌. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல் தெலுங்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் மாதவனின் ‘மாறா’… அமேசான் பிரைமில் ரிலீஸ்…!!

நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாறா’ . இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார் . ஜிப்ரான் இசையமைத்துள்ளார் . இந்த படம் கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற சார்லி படத்தின் தமிழ் ரீமேக் ‌. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இந்த படத்தை திரையரங்கில் காண காத்திருக்கிறேன்’… ‘கே ஜி எஃப் 2’ டீசர் ரிலீஸ்… சிவகார்த்திகேயன் டுவீட்…!!!

‘கேஜிஎப் 2’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் கே ஜி எஃப் . கன்னடத்தில் உருவான இந்த படம் தமிழ், மலையாளம் ,ஹிந்தி ,தெலுங்கு என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது . அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷை வைத்து படம் பண்ண இயக்குனர்… தற்போது அதலபாதாளத்தில்… யார் தெரியுமா..?

பிரபல இயக்குனரை நடிகர் தனுஷ் அதலபாதாளத்திற்கு தள்ளியுள்ளார். ஆரம்ப காலம் முதல் இன்று வரை சினிமாவில் தனது ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை மெருகேற்றி கொண்டு இருக்கும் நடிகர் என்றால் அது தனுஷ் தான். ஆனால் வசூல் ரீதியாக அவர் பெரிதளவில் படத்தை கொடுத்ததில்லை. அவர் நன்றாக நடித்த படங்கள் கூட வசூல் ரீதியாக தோல்வி அடைந்துள்ளது. உதாரணத்திற்கு மயக்கம் என்ன திரைப்படம். தனுஷ் வசூல் ரீதியாக வெற்றி கொடுத்த படங்கள் என்றால் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தனுஷுடன் இணைந்த பிரபல நடிகர்… படக்குழு வெளியிட்ட அறிவிப்பு…!!!

கார்த்திக் நரேன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தில் பிரபல நடிகர் சமுத்திரகனி இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது ‌. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் . இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்க இருப்பதாகவும் படக்குழு அறிவித்திருந்தது ‌. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . நேற்று இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நான் பேசி முடிக்கும் வரை நீங்கள் பேசவேண்டாம்’… ரம்யா வாயை அடைத்த ஆரி…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்  டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதில் தற்போது நடக்கும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வரும் வாக்கியங்கள் யாருக்கு பொருந்தும் என்பதை கூற வேண்டும் . இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் ஆரி தனக்கு வந்த வாக்கியத்திற்கான விளக்கத்தை அளித்துக் கொண்டிருக்கிறார் . அப்போது ஆரி ‘நேற்று ரம்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாளை மாலை 5.04 மணிக்கு…. ஈஸ்வரன் பட டிரெய்லர் வெளியீடு…!!

சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் 100% இருக்கைகளுக்கு அனுமதி மறுக்க்கப்பட்டுள்ளதால் திரைப்படம் வெளியாகுமா? என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. இந்நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் பட டிரைலர் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திட்டமிட்டபடி ஜனவரி 14ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு அது போல் பேசியது தவறு… அவருக்கு கொரோனா வந்தா தெரியும்..‌. ஆவேசமாக பேசிய கருணாஸ்…!!!

‘சிம்பு அது போல் பேசியது தவறு’ என நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் மற்றும் நடிகர் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களும் வருகிற ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது . திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது . ஆனால் நேற்று மத்திய அரசு இதற்கு கண்டனம் அறிவித்து 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதிக்க உத்தரவிட்டது . […]

Categories
இந்திய சினிமா சினிமா

போடு செம…. 3.3 மில்லியன் லைக்குகளை…. பெற்ற #ButtaBomma பாடல் …!!

புட்ட பொம்மா என்ற தெலுங்கு பாடல் இந்தியாவில் பிரபலமாகி 3.3 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. தெலுங்கில் வெளியாகி இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்த பாடல் புட்ட பொம்மா. இந்த பாடல் யூடிபில் 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் 3.3 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதற்கு  இசையமைப்பாளர் தமன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் #ButtaBommma அதிக அளவில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலா ,சிவானி இருவரிடம் குளோஸாக ட்ரை பண்ணுனேன் … அன்சீன் வீடியோவில் க்யூட்டா பேசிய கேபி…!!!

விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அன்சீன் எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது ‌.  இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை ஏழு சுற்றுக்கள் நிறைவடைந்துள்ளது . தற்போது நடைபெற்று வரும் சுற்றில் கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு எந்த நபர் பொருந்துவார் என ஒவ்வொருவரும் கூற வேண்டும் ‌. இந்நிலையில் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகி வரும் அன்சீன் எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது ‌. அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ரியோவை கோமாளி என விமர்சித்த ரசிகர்… டிவிட்டரில் ரியோ மனைவி பதிலடி…!!!

பிக் பாஸ் ரியோவை கோமாளி என கமெண்ட் செய்தவர்களுக்கு அவரது மனைவி ஸ்ருதி ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.  பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது . இந்த வாரம் நடைபெற்று வரும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் நேரடியாக இறுதி வாரத்திற்கு தகுதி பெறுவர் . இதில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ரியோ அதிக மதிப்பெண்ணில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ரியோவை கோமாளி என விமர்சித்த ரசிகருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் கிரேஸி பாடலுக்கு ரிகர்சல் செய்யும் தனுஷ்… வெளியான புகைப்படங்கள்…!!!

கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ள தனுஷ் ஒரு பாடலுக்கு நடன ஒத்திகை பார்க்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது . இந்நிலையில் இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவரா?… கசிந்த தகவல்கள்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு ரம்யா மற்றும் ஷிவானிக்கு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ?என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே எகிறியுள்ளது ‌. இந்த வாரம் நடைபெற்று வரும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் அதிக மதிப்பெண்கள் பெற்று ரியோ முன்னிலையில் உள்ளார் .   இந்நிலையில் இந்த வாரம் வெளியேற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்…. ரிலீஸ் ஆவதில் சிக்கல்…!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படமானது ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படங்கள் வரும் பொங்கலையொட்டி வெளியாக உள்ளது. இந்நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கையை அனுமதிக்குமாறு நடிகர் சிம்பு மற்றும் விஜய் முதல்வர் எடப்பாடிஇடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து திரையரங்குகளில் 100 தனது இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தன. எனவே இந்த முடிவை ரத்து செய்ய […]

Categories
இந்திய சினிமா சினிமா

குடியிருப்பை உணவகமாக மாற்றிய…. சோனு மீது வழக்குப்பதிவு…!!

குடியிருப்பை உணவகமாக மாற்றியதற்காக சோனு சூட் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் சோனு சூட் மும்பை ஜுஹு பகுதியில் ஆறு மாடி கட்டிடம் ஒன்றை உணவாக மாற்றியுள்ளார். இதனால் சோனு மீதும், அவருடைய மனைவியும் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் அரசு விதிமுறைகளை மீறி அனுமதி இல்லாமல் உணவகத்தை உருவாக்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 27ஆம் தேதி மும்பை நகராட்சி சார்பில் அறிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மார்கழி மாத திருப்பாவை பாசுரம்… ஒன்றுகூடிய ஒன்பது நடிகைகள்…!!!

மார்கழி மாத திருப்பாவை பாசுரத்துக்காக ஒன்பது நடிகைகள் இணைந்துள்ளனர். நடிகைகள் சுகாசினி ,ரேவதி, ரம்யா நம்பீசன், கனிகா, உமா பத்மநாபன், நித்யா மேனன் ,அனுஹாசன், ஜெயஸ்ரீ ஆகிய 8 பேர் இணைந்து மார்கழி மாத திருப்பாவை பாசுரத்தை பாடியுள்ளனர் . நடிகை சோபனா இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார் . இதுகுறித்து நடிகை சுஹாசினி ‘மார்கழித்திங்கள் தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய இளைய சமுதாயத்திற்கு மறு அறிமுகம் செய்யும் முயற்சியாக நாங்கள் எங்கள் சொந்த குரலில் மார்கழி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கெத்து காட்டும் தளபதி… இணையத்தை தெறிக்கவிடும் ‘வாத்தி ரைடு’ பாடல் புரோமோ…!!!

தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் வாத்தி ரைடு பாடல் புரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . https://twitter.com/XBFilmCreators/status/1347158884570435589 இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களும் திரையுலக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… ஒடிடியில் ரிலீஸா?… வெளியான தகவல்கள்…!!!

இயக்குனர் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன் . இவர் கடந்த 20 ஆண்டுகளில் 8 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் . இருப்பினும் இவர் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காவியமாக இருந்து வருகிறது . கடந்த ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ‘என் ஜி கே’ திரைப்படம் வெளியானது. மேலும் செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் VS சிம்பு… பொங்கலுக்கு யார் படம்?…!!!

பொங்கலுக்கு திரையரங்குகளில் விஜய் படம் ரிலீசாகுமா அல்லது சிம்பு படம் ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

100 சதவீத இருக்கை வாபஸானால்… மாஸ்டர் மட்டும்தான்… திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி தகவல்… சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கான அனுமதி வாபஸானால் ‘மாஸ்டர்’ மட்டுமே ரிலீஸாகும் என திருப்பூர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜயின் மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இதேபோல் நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படமும் திரையரங்குகளில் வருகிற ஜனவரி 14-ஆம் தேதி வெளியாக உள்ளது . 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கிய திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எவ்வளவு துன்பம் வந்தாலும் ஆரி ஆரியாவே இருக்காரு ..‌‌. பாராட்டிப் பேசும் பாலா… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் ஏழாவது சுற்று நடைபெற்றது . இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோ வில் 8-வது சுற்று நடைபெறுவதாக தெரிகிறது. அதில் கொடுக்கப்பட்ட வாக்கியத் துண்டில் இருக்கும் வாக்கியம் யாருக்கு பொருந்தும் என்பதை காரணத்தோடு கூற வேண்டும். #Day95 #Promo3 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த குட்டி பையன் யார் தெரியுதா..? இவர்தான் குட்டி சூர்யா(நந்தா)… தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..??

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம் நந்தா. இந்த படமும் பாடலும் ரசிகர்களால் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சூர்யாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்தவர் வினோத் கிஷன். இப்போது வளர்ந்து இளம் நடிகராக வலம் வருகிறார். வினோத் கிஷன் ஒரு பேய் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் பெயர் அத்தியாயம். இது ஆறு குறும்படங்களின் தொகுப்பு. மேலும் நான் மகான் அல்ல படத்தில் இவர் வில்லனாகவும், அந்தகாரம் படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே ஜி எஃப் 2’- வை கைப்பற்றிய பிரபல மலையாள நடிகர்… டுவிட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கே ஜி எஃப் 2’ படத்தை பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றியுள்ளார் . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கே ஜி எஃப்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது . இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி ,சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர் . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளியாக உள்ளது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு ரகசிய திருமணமா?… கசிந்த தகவல்கள்…!!!

நடிகை கயல் ஆனந்திக்கு இன்று இரவு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது ‌. தமிழ் திரையுலகில் நடிகை ஆனந்தி 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ‌ . இதையடுத்து இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் ‌. இதனால் ‘கயல்’ ஆனந்தி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார் ‌. இதன் பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக ஜாலியாக பேசிய ஆரி… பாராட்டி கட்டியணைத்த ரியோ… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் ஏழாவது சுற்று நடைபெறுகிறது . இந்த டாஸ்க்கை போட்டியாளர்கள் மிகத் தீவிரமாக விளையாடி வருகிறார்கள் . இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் 8-வது சுற்று நடைபெறுவதாக தெரிகிறது . #Day95 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2021 வருடத்தில் ரசிகர்கள்…. எதிர்பார்க்கும் படங்கள்…. வாங்க பார்க்கலாம்…!!

2021 வருடத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு 2021ல் மாஸ்டர், ஈஸ்வரன், அண்ணாத்த, இந்தியன் 2, வலிமை, ஜகமே தந்திரம் போன்ற திரைப்படங்களின் வெளியீட்டை பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் மாஸ்டர், ஈஸ்வரன் இரண்டு திரைப்படங்ளும் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா, சாந்தனு, கௌரி கிசன் போன்ற பிரபலங்களும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

Breaking: மிக பிரபல நடிகர் மீது புகார்… அதிர்ச்சி செய்தி… ரசிகர்கள் கவலை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 மாடி குடியிருப்பு கட்டிடத்தை முறையான அனுமதியின்றி ஓட்டலாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூஷூவில் உள்ள ஆறு மாடி குடியிருப்பு கட்டிடத்தை முறையான அனுமதியின்றி ஓட்டலாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மீது மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் போலீசார் புகார் அளித்துள்ளனர். மேலும் பிராந்திய மற்றும் நகர திட்டமிடல் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் இடம் கேட்டுள்ளது. ஆனால் பி எம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணைந்த திருமணம் சீரியல் ஜோடி… வைரலாகும் புகைப்படம்…!!!

திருமணம் சீரியல் ஜோடி சந்தோஷ்- ஸ்ரேயாவின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர்களில் ஒன்று ‘திருமணம்’. இந்த தொடரின் முதன்மை கதாபாத்திரங்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . ஆனால் கொரோனா ஊரடங்கு இருக்கு பிறகு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் திடீரென அக்டோபர் 16ஆம் தேதி நிறைவு பெற்றது. இதனால் திருமணம் சீரியல் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ … பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிபரப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!

சன் தொலைக்காட்சியில் வருகிற பொங்கல் தினத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஒடிடியில் வெளியான சூரரைப்  போற்று படம் ஒளிபரப்பாகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் ஒடிடியில் வெளியான படம் சூரரை போற்று . இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படம் ரசிகர்களாலும் ,விமர்சகர்களாலும்,திரையுலக பிரபலங்களாலும் பாராட்டைப் பெற்றது .   கொரோனா ஊரடங்கு காரணமாக அமேசான் பிரைமில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக்  குவித்தது . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கேரளாவில் ‘மாஸ்டர்’ படத்துக்கு சிக்கல்… அரசு அனுமதி அளித்தும் திறக்கப்படாத தியேட்டர்கள்…!!!

கேரளாவில் அரசு அனுமதி அளித்தும் திரையரங்குகள் திறக்கப்படாததால் அங்கு மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . கேரள மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 10 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன . இதையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஜனவரி 5ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கினார் . ஆனால் கேரளாவில் அரசு அனுமதி அளித்தும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை . திரையரங்குகள் மூடப் பட்டிருந்த காலத்தில் அதற்கு கணக்கிடப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘பத்து தல’… படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் சிம்புவின் ‘பத்துதல’ படத்தில் பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள ‘ஈஸ்வரன்’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இவர் தற்போது வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். சிம்பு  ‌அடுத்ததாக ‌இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீங்கள் ஒரு நல்ல மருத்துவரை பாருங்கள் ‘…ட்விட்டரில் விமர்சித்த ரசிகர்… பதிலடி கொடுத்த மாதவன்…!!!

ட்விட்டரில் விமர்சித்த ரசிகருக்கு நடிகர் மாதவன் பதிலடி கொடுத்துள்ளார் ‌. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ படம் நாளை ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது . இந்நிலையில் நடிகர் மாதவன் இந்தி நடிகர் அமித் சாத் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் . இந்த பதிவை மாதவன் ரசிகர்கள் பாராட்டி இணையத்தில் வைரலாக்கி வந்தனர் . இதையடுத்து ஒரு ரசிகர் இந்த பதிவுக்கு கடுமையாக விமர்சனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக கதாநாயகனாகும் காமெடி நடிகர் செந்தில்… படம் குறித்து வெளியான தகவல்கள்…!!

பிரபல காமெடி நடிகர் செந்தில் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்தவர் செந்தில் . இவர் பல திரைப்படங்களில் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இவர்கள் காமெடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது . இதையடுத்து நடிகர் கவுண்டமணி ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டார் . ஆனால் நடிகர் செந்தில் இதுவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உருண்டு உருண்டு விளையாடும் போட்டியாளர்கள்… முடிவை சொல்லும் மூன்றாவது அம்பயர்… வெளியான பஸ்ட் புரோமோ…!!!

  பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் ஏழாவது சுற்று நடைபெறுகிறது . அதில் போட்டியாளர்கள் உருண்டு உருண்டு ஒரு வளையத்தில் இருந்து பந்துகளை எடுத்து மற்றொரு வளையத்துக்குள் போடவேண்டும் . அந்த வளையத்தில் போட்ட அனைத்து பந்துகளையும் மீண்டும் முதல் வளையத்திற்குள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

100 பேருக்கு இலவச செல்போன்… பிரபல நடிகருக்கு குவியும் பாராட்டு…!!!

பிரபல நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் மாணவருக்கு செல்போன் இலவசமாக வழங்கி யுள்ளார். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மக்கள் வீட்டை விட்டு வெளியேற மிகவும் அவதிப்பட்டு வந்தனர். அதன்பிறகு மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் எட்டு நாள் தான் இருக்கு … ‘ஈஸ்வரன்’ பொங்கல் … சிம்பு வெளியிட்ட வீடியோ…!!!

ஈஸ்வரன் படம் வெளியாவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ளது என நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன்  இயக்கியுள்ள இந்த படத்தில் நிதி அகர்வால் ,நந்திதா ,பாரதிராஜா ,பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் […]

Categories

Tech |