Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாரின் “ஜெயிலர்”…. புதிய அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்…!!!!

ஜெயிலர் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இந்நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி படபிடிப்பு தளத்தில் நடிகர் சிவராஜ்குமார் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு இருக்கின்றது. இப்புகைப்படத்தை ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: மக்களின் அதிக ஓட்டு இவருக்கா?… இந்த வாரம் எலிமினேட் யார்?…. வெளியான பட்டியல்….!!!!

தமிழ் சின்னத் திரையில் சென்ற 5 வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இந்த ஆண்டு 6வது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறி வருகிறார். அதன்படி இதுவரையிலும் 5 பேர் வெளியேறி இருக்கின்றனர். இப்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். சுமார் 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சியில் இந்த வாரம் அசிம், ஆயிஷா, […]

Categories
மாநில செய்திகள்

ரசிகர்களுக்கு ஷாக்!… வாரிசு படத்திற்கு வந்த சிக்கல்!…. விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பிய சீமான்…..!!!!!

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாகி இருக்கிறது. பொங்கல் அன்று இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் அன்றைய தினம் ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆகவே நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவங்ககிட்ட சிக்கிடாதீங்க!…. தனியா இருப்பதே பெஸ்ட்…. நடிகை சதா அட்வைஸ்…..!!!!!

தமிழில் ஜெயம், வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் தான் சதா(38). அத்துடன் இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் சதா சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “சில தேவைகளுக்காக இருக்கும் உறவுகளில் சிக்கிக்கொண்டு அந்த மனிதர்கள் நம்மைவிட்டு பிரிந்து விடுவார்களோ என எதற்கு பயப்படுகிறீர்கள். நம்மை நெருக்கமானவர்களாக பார்க்காதவர்கள் தம்மை விட்டு விலகியிருப்பது தான் நல்லது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நீங்கள் மட்டும் தான் உங்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர்களுக்கு சிறந்த தடம் அமைத்து கொடுப்பது இதுதான்?…. டிரைக்டர் விஜய் ஸ்பீச்….!!!!

தமிழில் வெற்றி திரைப்படங்கள் கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் விஜய் இப்போது பிரசன்னா, மிருதுளா ஸ்ரீதரன் போன்றோருடன் இணைந்து “பைவ் சிக்ஸ் செவன் எய்ட்” எனும் ஓடிடி தளத்துக்கான படத்தை டிரைக்டு செய்துள்ளார். இது தொடர்பாக விஜய் கூறியதாவது “டிஜிட்டல் தளங்கள் இயக்குனர்களுக்கு சாதகமாக இருக்கிறது. திரையுலகில் 2 மணி நேரம் மட்டுமே கூற முடிவதை ஓடிடி-யில் 4 மணிநேரம் விரிவாக சொல்ல முடியும். இதற்கிடையில் வெப் தொடர்கள் அதிகம் வருகிறது. ஓடிடி டிஜிட்டல் தளங்கள் […]

Categories
சினிமா

அச்சச்சோ!…. தோல்வியை தழுவிய அக்‌ஷய் குமார் படம்…. ரூ.15 கோடி நஷ்டம்…. லீக்கான தகவல்….!!!!

அக்‌ஷய்குமார் நடிப்பில் சென்ற மாதம் 25ஆம் தேதி திரைக்கு வந்த ராம் சேது திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. இப்படத்தை ரூபாய்.90 கோடி செலவில் எடுத்திருந்தனர். எனினும் திரையரங்குகளில் ரூபாய்.75 கோடி மட்டுமே வசூலித்தால் ரூ.15 கோடி நஷ்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி பெரியளவில் வசூல் பார்த்த பாகுபலி, கே.ஜி.எப், புஷ்பா படங்களுக்கு பின் பல படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படங்களாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… கவர்ச்சி புயலுக்கு இந்த தமிழ் நடிகர் தான் பிடிக்குமா?….. யாருப்பா அந்த சூப்பர் மாஸ் ஹீரோ…..!!!!!

நவரசநாயகன் கார்த்திக் நடிப்பில் டிரைக்டர் ஜெயமுருகன் இயக்கத்தில் “தீ இவன்” படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நடிகை சுகன்யா, நடிகர்கள் சிங்கம்புலி, ஜான் விஜய் உட்பட பல பேர் நடித்து இருக்கின்றனர். அத்துடன் இந்த படத்தில் நடிகை சன்னிலியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இந்த நிலையில் “தீ இவன்” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற சன்னிலியோன், செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் உறுப்பு முழுவதையும் தானம் செய்த பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா…. நல்ல மனசுக்கு குவியும் பாராட்டு….!!!!!

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வாயிலாக பிரபலமான விஜய் தேவரகொண்டா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவர் தமிழில் நோட்டா திரைப்படத்தில் நடித்து உள்ளார். மேலும் அவரது டியர் காமரேட் தெலுங்கு திரைப்படமும் தமிழில் வந்தது. இவ்வாறு குறைந்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்திருக்கிறார். எனினும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகிய லைகர் படம் படு தோல்வியடைந்து அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதன் காரணமாக அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உதயநிதி சாரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்”… நிதி அகர்வால் ஓபன் டாக்..!!!

உதயநிதி குறித்து பேட்டி ஒன்றில் நிதி அகர்வால் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இப்படம் இன்று நவம்பர் 18ஆம் தேதி வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த நிதி அகர்வால் அண்மையில் பேட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அலியாபட்டின் “அவுட் ஆப் போகஸ்‌”…. இந்த போட்டோவுக்கே இம்புட்டு லைக்ஸா…!!!!

அலியா பட் பகிர்ந்த அவுட் ஆப் போகஸ்‌ போட்டோவிற்கே 17 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் சென்ற 2012 ஆம் வருடம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்…! துளு மொழியிலும் வெளியாக இருக்கும் காந்தாரா… படம் குறித்து வெளியான தகவல்…!!!!!

காந்தாரா திரைப்படம் துளு மொழியிலும் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை காட்சிகளையும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

OMG.! படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல ஹீரோ… புது மாப்பிள்ளை இப்படி செய்யலாமா..?

படப்பிடிப்பு தளத்தில் பிரபல ஹீரோ மயங்கி விழுந்துள்ளார். தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சவுர்யா. இவர் தற்போது அருணாச்சலம் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கின்றார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்தபின் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாவது, இவர் இந்த படத்திற்காக தனது உடலை சிக்ஸ்பேக் வைப்பதற்காக கடுமையான பயிற்சிகளை செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஜி கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காஜல் பசுபதி…. குடும்பத்துடன் எடுத்த போட்டோ இணையத்தில் பதிவு…!!!!

சாண்டி மாஸ்டர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காஜல் பசுபதி இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் சாண்டி மாஸ்டர் இதற்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக சென்ற 2012 ஆம் வருடம் இருவரும் விவாகரத்து செய்துவிட்டார்கள். இதன்பின் சில்வியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் “கொன்றால் பாவம்”… வெளியான பட அப்டேட்…!!!!

ஹைதராபாத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் தற்போது கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். கொன்றால் பாவம் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் 1981-களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையை கொண்டு எடுக்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்பிரமணியம் சிவா, இம்ரான், சென்ராயன் உள்ளிட்ட பலர் முக்கிய […]

Categories
சினிமா

“எப்போதும் புதுசா ஒன்றை முயற்சி செய்வதே என் நோக்கம்”…. ஹரிப்ரியா ஸ்பீச்….!!!

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சத்யசிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் “நான் மிருகமாய் மாற” படம் நவம்பர் 18ம் தேதி நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஹரிப்ரியா நாயகியாக நடித்து இருக்கிறார். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் வாயிலாக தமிழில் நடிக்கிறார். இந்த படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர். இதையடுத்து நாயகி ஹரிப்ரியா பேசியதாவது, செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கடைசியாக 2010 ஆம் வருடம் வல்லக்கோட்டை படம் நடித்தேன். அதன்பின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னுடன் நடிக்க பயப்படுதாங்க!…. காரணம் இதுதான்?… பிரகாஷ்ராஜ் ஓபன் டாக்….!!!!

தமிழ், தெலுங்கு, கன்னட ஆகிய திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ் அண்மை காலமாக அரசியல் குறித்து துணிச்சலாக பேசி வருகிறார். அதிலும் குறிப்பாக அவர் பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷ்ராஜ் பேட்டி அளித்ததாவது ”அண்மை காலமாக நான் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறேன். இதன் காரணமாக ஒரு காலத்தில் என்னுடன் இணைந்து நடித்தவர்கள் தற்போது சேர்ந்து நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிப்பதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. இவ்வளவு வியூவெர்ஸா?…. புது மைல் கல்லை எட்டிய விஜய் பாடல்…. இணையத்தில் வைரல்….!!!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அத்துடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. தீபாவளி தினத்தன்று “வாரிசு” படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது. இதையடுத்து இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் 46வது படம்…. “நல்லா இரும்மா” பாடல் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

விஜய் சேதுபதி நடிக்கும் 46வது படத்தை டிரைக்டர் பொன்ராம் இயக்குகிறார். “டிஎஸ்பி” என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்து இருக்கிறார். அத்துடன் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உட்பட பல பேர் நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அப்போ வீட்டு வாடகை கொடுக்க கூட பணமில்லை”…. உருக்கமாக பேசிய ராஷ்மிகா மந்தனா….!!!!

தமிழில் கார்த்தி உடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடிக்கிறார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு புஷ்பா திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகிய சீதாராமம் படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடிப்பு பேசப்பட்டது. தற்போது ராஷ்மிகாவுக்கு கைநிறைய பணம் இருக்கிறது. கர்நாடகாவில் அவர் நிறைய சொத்துகள் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவரது வீட்டில் வருமான வரி சோதனையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்… இந்த படத்தில் இருக்குது… ஆண்ட்ரியா ஓபன் டாக்…!!!!

அனல் மேல் பனித்துளி திரைப்படம் குறித்து ஆண்ட்ரியா பேசியுள்ளார். ஜெய்சர் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அனல் மேல் பனித்துளி. இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற 18ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் ஆண்ட்ரியா கூறியுள்ளதாவது, நகருக்கு வரும் பெண்கள் பொதுவெளிக்கு வரும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தான் இப்படக்கதை. 11 வயது இருக்கும் போது நான் வேளாங்கண்ணிக்கு பேருந்தில் சென்றேன். அப்போது எனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜிஎஸ்டி வரியை குறைங்க”…. தயாரிப்பாளர் சங்கம்… அமைச்சரிடம் கோரிக்கை மனு…!!!!

ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அமைச்சர் எல்.முருகனிடம் மனு கொடுத்துள்ளார்கள். இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தபின் திரைப்படங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. மேலும் 10% டிடிஎஸ் வரி வசூலிக்கப்படுகின்றது. இதனால் மத்திய அரசிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் ஜிஎஸ்டி வரி மற்றும் டிடிஎஸ் தொகையை குறைக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆர்கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள், டி.சிவா, லலித்குமார் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹாப்பி பர்த்டே அம்மா-அச்சா….!” போட்டோவை பகிர்ந்து கீர்த்தி சுரேஷ் வாழ்த்து…!!!

பெற்றோரின் பிறந்தநாளை கீர்த்தி சுரேஷ் கீர்த்தி கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் அதிக திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக 80-களில் வலம் வந்தவர் நடிகை மேனகா. இவர் தமிழிலும் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் இரண்டாவது மகள் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் நடிகை மேனகாவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ்குமாருக்கும் நேற்று நவம்பர் 16 ஒரே நாளில் பிறந்தநாள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் இறப்பு…. ஜி.வி.பிரகாஷ் உருக்கமாக பதிவு…!!!!

மாணவி பிரியா குறித்து ஜி.வி.பிரகாஷ் உருக்கமாக பதிவிட்டுள்ளார். சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து வீராங்கனையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை தான் உயிரிழப்பிற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றார்கள். இதனால் பொதுமக்களும் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே..! நயன் பிறந்தநாளுக்கு வெளியாகும் கனெக்ட் பட டீசர்…. அறிவிப்பை வெளியிட்ட விக்கி…!!!!

நயன்தாரா நடிக்கும் திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் தற்போது ஜவான், கனெக்ட், இறைவன், கோல்ட் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்து வருகின்றார். இவர் தற்போது நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். மேலும் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கின்றார்‌. இத்திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கின்றார். அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

7 வருஷத்துக்கு பின் மீண்டும்…. டி.இமான் இசையில் உதித்நாராயண் பாடல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

7 ஆண்டுகளுக்கு பின் உதித்நாராயண், இசை கலைஞரான டி.இமான் இசையில் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.  பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி பிரபலமடைந்தவர் உதித்நாராயண். இவர் ஜிவி.பிரகாஷ் இசையில் இது என்ன மாயம் படத்தில் கடைசியாக பாடிய பாடல் “மச்சி மச்சி” என்பதாகும். இதையடுத்து அவர் 7 ஆண்டுகளுக்கு பின் இப்போது பாடியுள்ளார்.  பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் புது படம் டீஎஸ்பி. இத்திரைப்படத்தில் டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தில் அனுகீர்த்தி நாயகியாக நடித்து உள்ளார். ஷிவானி நாராயணன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புது கெட்டப்பில் நடிகர் கார்த்தி…. எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான புகைப்படம்…. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!

கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்திலும் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்குவர இருக்கிறது. அத்துடன் அவர் சர்தார் திரைப்படத்தின் 2ஆம் பாகத்தில் நடிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். சர்தார் திரைப்படத்தில் இடம்பெற்ற கார்த்தியின் வயதான தோற்றம் ரசிகர்களை கவர்ந்ததால் 2ம் பாகம் படத்திலும் வயதான கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருப்பது போல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்-2: மீண்டும் சூட்டிங் பண்ண போறீங்களா?…. படக்குழுவினர் கொடுத்த விளக்கம்….!!!!

டிரைக்டர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி முதல் பாகம் சென்ற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி திரைக்கு வந்து ரூபாய்.500 கோடிக்கு மேல் வசூல் ஆனது. இவற்றில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம்ரவி, பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடித்திருந்தனர். பொன்னியின் செல்வனின் இரண்டு பாகமும் ரூபாய்.500 கோடி செலவில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதல் பாகத்தை எடுக்கும் போதே 2ஆம் பாகத்துக்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கல்யாணம் பண்ணாமலும் ஹேப்பியா இருங்காங்க”… என் மகிழ்ச்சிக்கு நானே பொறுப்பு…. நடிகை ஆண்ட்ரியா ஸ்பீச் ….!!!!

நடிகை ஆண்ட்ரியா பிசாசு-2, அனல் மேலே பனித்துளி போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அத்துடன் அவருக்கு 5 படங்கள் கைவசம் இருக்கிறது. இந்நிலையில் ஆண்ட்ரியா பேட்டியில் அளித்ததாவது, ”கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்கள் தற்போது அதிகம் வருகிறது. இது வரவேற்கத்தக்க ஒன்று. இந்நிலைமை தொடர வேண்டும் என விரும்புகிறேன். இப்போது வெற்றிமாறன் தயாரிப்பில் கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் ஆதவ் கண்ணதாசனுடன் நான் நடித்துள்ள அனல் மேலே பனித்துளி திரைப்படத்திலும் எனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் அமைந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அந்த ஆனந்தம் தெரியும்”… உடற்பயிற்சி குறித்து பிரபல நடிகை பேட்டி…!!!!

நடிகை ரகுல் பிரீத் சிங் உடற்பயிற்சி குறித்து பேசி உள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்த வரும் கதாநாயகிகளில் ஒருவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான என். ஜி. கே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளதாவது, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“RRR-2ம் பாகம்”…. சூப்பர் அப்டேட் கொடுத்த ராஜமௌலி… அப்ப அடுத்த வசூல் வேட்டைதான்…!!!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் ராஜமௌலி பேசியுள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் “ஆர் ஆர் ஆர்”  திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் பல பிரம்மாண்டங்களை நிகழ்த்தி இருந்தார் ராஜமௌலி. இத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் தீவிரமாக காத்திருந்தனர். அதன்படி திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என இந்திய மொழிகளில் சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லவ் டுடே-“என்னைவிட்டு உயிர் போனாலும்….” யுவன் குரலில்…. இசையில் உருகும் ரசிகர்கள்…!!!

“என்னை விட்டு உயிர் போனாலும்” பாடல் யுவன் குரலில் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. இத்திரைப்படத்தில் சித் ஸ்ரீராம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“டேய்… ஒரேயொரு போஸ் குடுடா…!” கீர்த்தி சுரேஷின் க்யூட் வீடியோ…. குவியும் லைக்ஸ்…!!!!

இன்ஸ்டா பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் பூனையுடன் விளையாடும் கியூட்டான வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் விஜய், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் படத்தில் இணைந்து நடித்து முண்ணனி நாயகியாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் கமர்சியல் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தும் அசத்தியுள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன், நானிக்கு ஜோடியாக தசரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். https://www.instagram.com/reel/Ck8DlGOvf1h/?utm_source=ig_embed&ig_rid=df678dd9-a1eb-45ad-b985-2bdbd879274d இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பூனையுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிராமத்து தோற்றத்தில் அதர்வா-ராஜ்கிரண்…. “பட்டத்து அரசன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!!!

அதர்வா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அதர்வா. இவர் தற்போது களவாணி, களவாணி 2, டோரா, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் பட்டத்து அரசன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. படம் குறித்து வெளியான போஸ்டரில் அதர்வாவும் ராஜ்கிரணும் கிராமத்து பாணியில் இருக்கின்றார்கள். இதனால் இத்திரைப்படம் கிராமத்து பின்னணியில் உருவாகி இருக்கலாம் என […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே” தெலுங்கு ட்ரைலர்… வெளியிட இருந்த விஜய்…. தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் அறிவிப்பு…!!!!

லவ் டுடே திரைப்படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. தமிழில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜெய் நடிக்கும் புதிய படத்தில்… பிரபல தெலுங்கு நடிகை தமிழில் என்ட்ரி…!!!!!

பிரபல தெலுங்கு நடிகை தமிழில் என்ட்ரி கொடுக்கின்றார். தெலுங்கு திரை உலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கின்றார் நடிகை பானு ஸ்ரீ. பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது பிரேக்கிங் நியூஸ் என்ற திரைப்படம் மூலமாக தமிழில் என்ட்ரி கொடுக்கின்றார். அந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஜெய் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ராகுல் பிலிம்ஸ் தயாரிக்க அண்ட்ரூ பாண்டியன் இயக்குகின்றார். சயின்ஸ் பிக்சன் ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இத்திரைப்படத்தில் ஜெய் சூப்பர் ஹீரோவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் கயல் ஆனந்தி… பட நிகழ்ச்சியில் ஓபன் டாக்…!!!!

நடிகை கயல் ஆனந்தி மலையாளத்தில் அறிமுகமாகின்றார். தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயல் ஆனந்தி. ஆனால் அவர் அடுத்ததாக நடித்த கயல் திரைப்படமே அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இதை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி இருக்கும் யூகி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற 18ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்பட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“தெலுங்கு சூப்பர் ஸ்டார் மறைவு”…. முதல்வர், ரஜினி, கமல் இரங்கல்…!!!!

நடிகர் கிருஷ்ணா மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் நடிகர் கிருஷ்ணா. இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது. இவரின் மறைவை தொடர்ந்து சினிமா துறையினர் அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மூத்த தெலுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டிலிருந்து சென்றதும்…. மகேஸ்வரியின் முதல் வீடியோ…. என்ன சொல்கிறார் தெரியுமா?…. வைரல்….!!!!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர் மகேஸ்வரி வெளியேறியிருக்கிறார். இதற்கு முன்னதாக ஷாந்தி, அசல்கோளார், ஷெரினா போன்ற போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள மகேஸ்வரி தனது ரசிகர்களுக்காக ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். Maheshwari after Eviction#BiggBossTamil6 #BiggBoss#BiggBossTamil pic.twitter.com/EOSQKiEPpd — Dr Kutty Siva (@drkuttysiva) November 14, 2022 அதில் “எனக்கு அன்புகொடுத்த அனைவருக்கும் நன்றி. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது எனக்கு மகிழ்ச்சிதான். தற்போது தான் தெரிந்து கொண்டேன் எவ்வளவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வைகை புயல் வடிவேலு நடிக்கும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”… வெளியான முதல் பாடல் வீடியோ…. குஷியில் ரசிகர்கள்….!!!!

டிரைக்டர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ், சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அத்துடன் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்து உள்ளார். “New school RAP la Dindugal Drake”Presenting our very own evergreen […]

Categories
சினிமா தமிழ் சினிமா

27-ம் வருடத்தில் “கிங்”… மம்முட்டியுடன் கொண்டாடிய இயக்குனர்…!!!!

மம்முட்டி நடித்த கிங் திரைப்படம் வெளியாகி 27 வருடங்களை தொட்டுள்ளது. மலையாள சினிமாவில் சென்ற 30 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி இயக்குனராக இருக்கின்றவர் ஷாஜி கைலாஷ். இவர் தமிழில் வாஞ்சிநாதன், எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். சென்ற சில மாதங்களுக்கு முன்பாக பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கடுவா திரைப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மோகன்லாலை வைத்து அலோன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் விரைவில் ரிலீசாக உள்ளது. சென்னையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவதாருடன் புஷ்பா-2…!” வெளியான படம் குறித்த முக்கிய அப்டேட்…!!!!

புஷ்பா-2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் “புஷ்பா”. இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. ‘புஸ்பா- தி ரூல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்ததிரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புது படம்…. வெளியான சூப்பர் தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஐசரிகணேஷ் தயாரிப்பில் வெளியாகிய எல்.கே.ஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் புது படத்தை ஐசரிகணேஷ் அதிக பொருட்செலவில் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் டிரைக்டு செய்கிறார். இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தை டிரைக்டு செய்து பிரபலமானவர் ஆவார். முன்னதாக இசையமைப்பாளராக இருந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

துல்கர் சல்மான் படத்தில் நடிக்கும் ரித்திகா சிங்… நடந்து வரும் ஷூட்டிங்…!!!!!

நடிகை ரித்திகா சிங் மலையாளத்தில் அறிமுகமாகின்றார். மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். இதன்பின் விஜய் சேதுபதி உடன் இணைந்து ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் கிங் ஆஃப் கோதா என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமாகின்றார். இத்திரைப்படத்தில் இவர் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு மட்டுமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை பூர்ணா தொடுத்த திருமண மோசடி வழக்கு….. நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!!

தமிழில் முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள பூர்ணா மலையாளம், தெலுங்கிலும் கூட அதிக படங்களில் நடித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் துபாய் தொழில் அதிபருடன் பூர்ணாவுக்கு திருமணம் நடைபெற்றது. சென்ற 2020ல் பூர்ணா திருமண மோசடி கும்பலிடம் சிக்கியது பரபரப்பாகியது. அப்போது பூர்ணாவுக்கு, ஒரு நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துபாயில் நகைக்கடை வைத்துள்ளதாகவும், உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். அதன்பின் சிலர் பூர்ணாவை பெண் கேட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சாகித் கபூரை இயக்கும் மலையாள முன்னணி இயக்குனர்”… படப்பிடிப்பு நாளை ஆரம்பம்…!!!!

மலையாள இயக்குனர் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கின்றார். மலையாள சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகின்றார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர் இப்படிப்பட்ட திரைப்படங்களை தான் இயக்குனர் என தன்னை ஒரு வட்டத்திற்குள் அடைத்து வைத்துக் கொள்ளாமல் பலவிதமான ஜானர்களில் படங்களை இயக்கி வருகின்றார். இவர் தமிழிலும் 36 வயதினிலே படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது மலையாளம், தமிழை தாண்டி பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கின்றார். இவர் இயக்கும் புதிய திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சாகித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சர்தார்” வெற்றிகரமாக 25-வது நாள்… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி….!!!!

நடிகர் கார்த்தி சர்தார் திரைப்படத்தின் 25 ஆவது நாளையொட்டி நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற “யசோதா”…. 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

சமந்தாவின் யசோதா திரைப்படம் பிளாக் பாஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்கள் இருக்கிறது. இவர் நடிப்பில் ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகே எனக்கு திருமணம்”…. விஷால் ஓபன் டாக்…!!!!

நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என விஷால் கூறியுள்ளார். அறிமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் “லத்தி” என்ற திரைப்படத்தில் நடிகர் விஷால் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை சுனேனா நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இதனை தொடர்ந்து “ராணா புரொடக்சன்ஸ்” சார்பாக இந்த படத்தை ரமணா மற்றும் நந்தா தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தின் டீசர், முதல் சிங்கிள் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து லிட்டில் சூப்பர் ஸ்டார்…. பாராட்டு மழையில் லவ் டுடே பட ஹீரோ…!!!!!

லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கு சிம்பு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. இந்த நிலையில் […]

Categories
சினிமா

இவர பார்த்தாலே சந்தேகமா இருக்கு…. அசீமின் உண்மை குணத்தை உடைத்த மைனா நந்தினி…. வைரலாகும் பிக் பாஸ் ப்ரொமோ….!!!!

பிக் பாஸ்  ப்ரொமோ வெளியாகியுள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 6  நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அசீம்  கடந்த மூன்று வாரங்களாக பயங்கரமாக விளையாடி தனது கோபத்தினை வெளிக்காட்டினார். இந்நிலையில் கடந்த வாரம் தவறு செய்தவர்களை கமல்ஹாசன் கடுமையாக கண்டித்தார். இதனால் நிகழ்ச்சியில் சுவாரசியம் அதிகமானது. தற்போது பிக் பாஸ் வீட்டில் அசீமின்  மாற்றத்தை கண்டு போட்டியாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மைனா  நந்தினி அசீமின் இன் உண்மையான […]

Categories

Tech |