முன்னாள் மலையாள நடிகையான நவ்யா நாயர் தனது சினிமா அனுபவங்களை தனியார் இணையத்திடம் பகிர்ந்துள்ளார் மலையாள திரையுலகில் இஷ்டம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நவ்யா நாயர் தமிழில் அழகிய தீயே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ராமன் தேடிய சீதை மாயக்கண்ணாடி போன்ற படங்களில் நடித்து பிரபலமான அவர் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார். பின்னர் குழந்தை குடும்பம் என இருந்தபடியால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். […]
