விடுமுறை தினத்தை முன்னிட்டு கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து சந்திரன் உதயமாகும் காட்சி தெரியும். இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் இந்த அபூர்வ காட்சியை பார்ப்பதற்காக கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனையடுத்து மாலை 6 மணி அளவில் அரபிக்கடல் பகுதியில் மஞ்சள் நிற சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. அப்போது வங்கக்கடல் பக்கமாக சந்திரன் மேகக் கூட்டங்களில் இருந்து வெளியே […]
