திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்தில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் கிரிவலம் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிரிவலம் வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கோவில் மற்றும் கிரிவலப் பாதையை […]
