நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சகோதரர் மகள் சித்ரா கோஷ் உயிரிழந்ததை யொட்டி பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு தலைவர்கள் போராடியுள்ளனர்.அப்படிப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி இப்போது நம்முடன் இல்லாமல் இருந்தாலும் அவரின் வீரமும், நற்செயலும் நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சகோதரர் சரத் சந்திர போஸின் இளைய மகள் சித்ரா கோஷ் நேற்று இரவு உயிரிழந்தார். […]
