கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து செயல்பட்டு வந்த 4 சித்த மருத்துவ மையங்கள் அடைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதுப்பேட்டை, அக்கரகாரம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி, வாணியம்பாடி யுவானி கேர், ஆம்பூர் கன்னிகாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி என 4 இடத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேர்ந்தவர்களுக்கு கபசுரக் குடிநீர், சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள், சத்தான உணவுகள் கொடுக்கப்பட்டது. […]
