கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த சித்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவி (51). இவர் ஒரு சித்த மருத்துவர். சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் அவருக்கு செய்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் மூலமாக […]
