ஆம்பூர் அருகில் 100 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை முகாமை நீர்வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் பகுதியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை முகாம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் தொடங்கி வைத்துள்ளார். இதற்கு முன்னதாக மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த 18 வயதிற்கு மேல் இருப்பவருக்கு […]
