கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தங்கியிருந்த வீடு மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அங்கு நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பாரபட்சம் ஏதும் பாராமல் அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து தொடர்ந்து, […]
