அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் உமையாள் ராமநாதன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “கொடைவள்ளல் டாக்டர் KV.AL.RM அழகப்ப செட்டியாரின் புதல்வியும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினருமான டாக்டர் உமையாள் ராமநாதன் திடீரென்று மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானேன். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக தன்னுடைய சொத்துக்களை எல்லாம் அர்ப்பணித்து அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கிய உமையாள் ராமநாதன் பெண்களின் கல்வி முன்னேற்றத்திலும், […]
