உலக சிட்டுக்குருவி நாளான இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் குருவிக் கூட்டை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பொருத்தினார். உழவர்களின் நண்பனாகத் திகழ்ந்த சிட்டுக் குருவிகள், வீடுகளிலும் வாழ்ந்து வந்தது. காலையில் எழும்போது குருவிகளின் ஒலி கேட்பவர்களின் காதுகளும் மட்டுமல்ல மனதையும் மயக்கும். இன்றைய காலத்தில் செல்போன் கோபுரங்களின் காரணமாக, அதிகளவு கதிர்வீச்சினால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன. வயல்களில் பூச்சி மருந்து அதிகம் தெளிக்கப்படும் பூச்சி புழுக்களை உண்ணும் சிட்டுக்குருவிகள் இறந்துவிடுகிறது. அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பதற்காக […]
