தமிழ்நாடு முழுவதும் சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான தொழில் மனைகளின் விலையை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தினை தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச்செய்ய தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்களின் நீண்ட நாள் கோரிக்கையை […]
