தமிழகத்தில் அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களை வாங்க வருபவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்யவும் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதை கண்காணிக்கவும், அனைத்து போலீஸ் கமிஷனர்களுக்கும் மாவட்ட எஸ்பிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதைப்பற்றி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பேசியிருப்பது, முன்விரோதம் காரணமாக கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட ஆப்பரேஷன் என்கின்ற தேடுதல் வேட்டையில் சுமார் 3,325 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் […]
