விழுப்புரத்தில் சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்கள், திருச்சி உள்ளிட்ட பகுதியில் இருந்து சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் இயக்கப்படும் பயணிகள் விரைவு ரயில்கள் அனைத்தும் தாமதமாக வரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து விரைவு ரயில்களும் 1 முதல் 2 மணி நேரம் காலதாமதமாக சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
