சிக்கன் டிக்கா மசாலாவை ‘கண்டுபிடித்த’ பாகிஸ்தான் சமையல் கலைஞர் அலி அகமது அஸ்லாம் (77) காலமானார். உலகளவில் கோழிக்கறி எனப்படும் சிக்கன் அதிகமான மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. கோழிக்கறியில் பல வகைகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான பெயரில் மாறுபட்ட சுவையில் கிடைக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் சிக்கன் டிக்கா மசாலா தான். இதை 1970இல் அலி அகமது அஸ்லாம் கண்டுபிடித்தார்.
