ஓட்டல் உரிமையாளரிடம் 3 பேர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் ஜெயராமனின் மகன் செந்தில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் செந்துறை ரேஷன் கடை எதிரில் ஓட்டல் நடத்தி வருகின்றார். அந்த ஓட்டலுக்கு உஞ்சினி கிராமத்தில் வசித்து வரும் வஞ்சினபுரம் கிராம நிர்வாக அலுவலரான சர்ஜித் சென்று ரொட்டி மற்றும் சிக்கன் கிரேவி கேட்டுள்ளார். இதனையடுத்து ஓட்டல் ஊழியர்கள் அவர் கேட்ட பார்சலை கொடுத்ததும் சர்ஜித் அங்கிருந்து சென்று விட்டார். […]
