ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஊரடங்கினால் சிகை அலங்காரம் செய்யவில்லை என்று கூறியுள்ளார். ஜெர்மனியில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் மக்கள் அத்தியாவசிய விஷயங்களுக்காகவும் தங்கள் வீடுகளில் இருந்து 9 மைல் தூரங்களை தாண்டி பயணிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜெர்மனி அதிபரான ஏஞ்சலா மெர்க்கல், “இந்த ஊரடங்கினால் மற்ற மக்களைப் போன்று நானும் […]
