நீலகிரி மாவட்டம் கூடலூரில் சாலையில் நடந்து சென்ற பெண் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தில் காட்டு யானையின் நடமாட்டத்தால் வீட்டை விட்டு வெளியேவர முடியாமல் தவிப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கூடலூர் அருகே உள்ள கொக்கால் பகுதியில் வசிக்கும் கமலா அம்மாள் என்பவர் அருகில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்ல சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது புதரில் மறைந்திருந்த ஒற்றை யானை அவரைத் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் […]
