கோயம்பேடு மார்க்கெட் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தமிழகத்தில் பெரும்பாலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வேகமாக பரவி வந்தது. இந்த பரவல் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வந்ததாக ஆய்வாளர்கள் கூறியதால் இந்த சந்தை தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஆனாலும் வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் தொடர்ந்து கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததால், தற்போது அதுகுறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வெளியிட்டுள்ள அந்த […]
