அரசு பேருந்தும் கதிரடிக்கும் எந்திரமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இடையப்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே ஒரு வழிப்பாதையில் கதிரடிக்கும் எந்திர வாகனம் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தும் கதிரடிக்கும் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]
