சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக சாலையோர போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாகனங்கள் நிறுத்துவதற்கு 83 இடங்களில் 7000 வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு இடங்கள் கண்டறியப்பட்டு செயல்படுத்தபட்டு வருகிறது. இந்த பணிகள் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு மணி நேரத்திற்கு நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 20, இரண்டு சக்கர வாகனங்கள் ரூபாய் 5 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாகன நிறுத்தத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து […]
