சாலையோர கடைகளை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் வியாபாரிகள் மற்றும் தி.மு.க-வினர் அதனை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 14 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் மேற்கு பகுதியில் இரண்டு வாயில்களும், கிழக்குப்பகுதியில் இரண்டு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்குப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சாலையோர பழக்கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மாநகராட்சி […]
