ராஜஸ்தான் மாநிலம் டவுசா என்ற மாவட்டத்தில் வீட்டின் அருகே உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரை கடந்த புதன்கிழமை வழக்கம்போல தந்தை பள்ளியில் விட்டு விட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் மாணவி அருகில் உள்ள நெட் சென்டரில் பிரிண்ட் அவுட் எடுப்பதற்காக சென்று மீண்டும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக வாகனத்தில் தூக்கிக் கொண்டு டெல்லி -மும்பை நெடுஞ்சாலையில் […]
