சாலையோரத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் இருக்கும் தாணுமாலய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பாக இருக்கும் சாலையில் மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவ்வழியே சென்ற கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் உதவியாளர் ரமணி ஆகியோர் மயங்கிக் கிடந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக […]
