சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே வேர்கிளம்பி சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் திருவட்டார், சாமியார் மடம், அழகியமண்டபம், சித்திரங்கோடு ஆகிய 4 ஊர்களின் சாலைகளும் இணைகிறது. இதைத்தொடர்ந்து கண்ணனூர் ஊராட்சி மற்றும் கோதநல்லூர், வேர்கிளம்பி பேரூராட்சிகளின் எல்லையாகவும் அமைந்துள்ளது. இந்த சாலைகளின் வழியாக அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள் போன்ற பல்வேறு வாகனங்கள் செல்கிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி வீடுகள் மற்றும் […]
