கொள்முதலுக்கு கொடுத்த பால்களை திருப்பி அனுப்பியதால் விவசாயிகள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொங்கனூர் மற்றும் கடத்தூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்திற்கு பால்களை கொள்முதல் செய்ய அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் விவசாயிகளின் பால்களை பாதி அளவு மட்டுமே கொள்முதல் செய்து விட்டு மீதம் பால்களை கூட்டுறவு சங்கத்தினர் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் விவசாயிகள் அதிக அளவில் பாதிப்படைந்து வருகின்றனர். இதனையடுத்து அவற்றை திரும்ப […]
