சாலையில் ரூபாய் நோட்டுகளை வாலிபர் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலை பகுதியான பெஜிலிட்டி அமைந்துள்ளது. இங்கு 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் சுற்றிக் கொண்டிருந்தார். அந்த வாலிபரின் கையில் ஏராளமான ரூபாய் நோட்டுகளும் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வாலிபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். இதனால் பயந்து போன வாலிபர் தான் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசிவிட்டு தப்பி ஓடினார். […]
