சாலைளை சுத்தம் செய்வதற்கான நவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய வாகனத்தை நகராட்சி நிர்வாகம் வாங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள 7.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரிக்கப்பட்டு சேகரித்து செல்கின்றனர். மேலும் தூய்மை பணியாளர்கள் தார்சாலைகள் மற்றும் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீமாறு […]
