கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் பகுதியில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு புரோக்கர்கள் மூலம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்து வந்தனர். நேற்று மாலை 6:30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர்பால் தலைமையிலான போலீசார் இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேஜைக்குள் கட்டு கட்டாக இருந்த […]
