தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் வகையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க சென்னையில் 600 இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எரிபொருள் சிக்கனம் மற்றும் காற்று மாசுபாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மின்சார வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட […]
