திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் சாரைப்பாம்பு ஒன்று உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை செல்லும் ரோட்டில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹாவின் பங்களா, முகாம் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த முகாம் அலுவலகத்தில் நேற்று முன்தினம் சாரை பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதைப்பார்த்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூரவேல் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அங்கு இருந்த 10 […]
