கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சாராயம் தயாரித்து மலையடிவார கிராமத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு காவல்துறையினர் பல முயற்சி மேற்கொண்டனர். எனினும் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முடியாமல் காவல்துறையினர் திணறுகிறார்கள். ஆகவே கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சப்படுவதும், அதை அங்கிருந்து கடத்தி கிராமங்களில் விற்பனை செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் காவல்துறையினர் மலையடிவாரத்திலுள்ள தகரை கிராமத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரி […]
