தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சாராயம் காய்ச்சிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் இருக்கும் கிழக்கு காட்டுக்கொட்டாயில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டத்திற்கு புறம்பாக சாராயம் காய்ச்சி அதை விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 17-ஆம் தேதி சின்னசேலம் காவல்துறையினர் கனியாமூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ராஜேந்திரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]
