சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கபட்டிருந்த ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்துவிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுவதாக அம்மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அம்மாவட்டத்தின் வனப் பகுதியான மட்டப்பாறையில் ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த சாராய ஊறலை காவல்துறையினர் கீழே ஊற்றி அழித்துவிட்டனர். மேலும் சாராய ஊறலை […]
