சாராயம் கடத்திய 2 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் நாகூரை அடுத்துள்ள மேலவாஞ்சூர் பகுதியில் உள்ள சுங்க சாவடியில் நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர் .இந்த விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை காவல்துறையினர் சோதனை செய்தனர் . […]
