கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கல்வராயன் மலை மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக இருக்கிறது. இதனை பயன்படுத்தி சமூவிரோதிகள் பலர் கல்வராயன்மலை மற்றும் அடிவாரப் பகுதியில் சாராயம் காய்ச்சி பல இடங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சாராயம் விற்பனை செய்ய கிராமபுறங்களில் ஏலமும் நடந்து வருகிறது. இதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் சமூக விரோதிகள் காவல்துறையினருக்கு சவால்விடும் வகையில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சங்கராபுரம் அருகில் அ.பாண்டலம் […]
