மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியாற்றிய சாரதா மேனன் காலமானார். இவருக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன், சென்னையில் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இன்று மாலை 4 மணி அளவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ கல்வி பயின்ற அவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர். மனநோயாளிகளின் சிகிச்சையில் […]
