கனமழை பெய்ததால் சாய்ந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை, காந்திநகர், பாலையாம்பட்டி, புளியம்பட்டி, ஆத்திப்பட்டி, பந்தல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதனை அடுத்து காந்திநகர் சர்வீஸ் சாலை, வி.வி.ஆர் காலனி உள்ளிட்ட பல […]
