ராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள மாரியூர் கிராமத்தில் முனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கூலித்தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் லிங்கம்(25) மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனையடுத்து தினமும் குடித்துவிட்டு தந்தை முனியாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று குடித்துவிட்டு வந்த […]
