ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் சாம்பியனுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சிறந்த வில்வித்தை வீரர்களான தீபிகா குமாரி மற்றும் அதானு தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 75 பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியின் போது ஆரோக்கியமான உணவு, கட்டுக்கோப்பான உடல், உடற்பயிற்சி போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களிடம் உள்ள உணவு முறைகளால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் […]
