சென்னையில் மனைவி சண்டை போட்டு சென்றதால் ஆத்திரம் அடைந்த கணவர், சாமியாரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் அடுத்துள்ள ஆலப்பாக்கம் என்ற பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஆதிபராசக்தி அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இருந்து பொதுமக்களுக்கு அவர் அருள்வாக்கு சொல்லி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வரும் திருமலை என்பவரின் மனைவி கணவருடன் சண்டை போட்டு வைத்து விட்டு வீட்டை […]
