நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் வெட்டியரசம்பாளையம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி வியாபாரம் செய்கிறார். இவரது வீட்டில் கடந்து 8 ஆம் தேதி அவரையும் மனைவி பழனியம்மாவையும் கட்டி போட்டு விட்டு வீட்டில் இருந்த ரூ.28 லட்சம் ரொக்கம், 18 சவரன் தங்க நகை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் படி 5 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். […]
