பல்லி விழுந்த சத்துணவு சாப்பாட்டை சாப்பிட்ட 47 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தானிப்பாடி அருகே இருக்கும் மோத்தக்கல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக ஏழுமலை என்பவர் பணியாற்றி வருகின்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் விடுமுறையில் இருக்கின்றார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதிய உணவை சமையலர் லட்சுமி மற்றும் சமையல் உதவியாளர் பல்ஹீத் உள்ளிட்ட இருவரும் சமைத்துள்ளார்கள். […]
