சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் நீதித்துறை நடுவர் அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு, மரணம் நிகழ்ந்தது தொடர்பாக நீதித்துறை தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையாக இருக்கக்கூடிய மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு விசாரணை எடுத்ததற்கு பிறகு இதில் நடந்திருக்கக் கூடிய விஷயங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் நியமிக்கப்பட்டிருந்தார். அறிக்கை தாக்கல்: நீதித்துறை […]
