சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது கூட்டுசதி பிரிவில் வழக்குபதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ புது மனுவை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து 120 பி மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றசாட்டு பதிவுசெய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ புது மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் பரவலாக பேசப்பட்டது. இவ்வழக்கு ஆரம்பத்தில் […]
